Home இலங்கைஉருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

உருக்குலைந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்பு!

by admin

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் வடலி தோட்டம் பகுதியைச் சேர்ந்த கந்தமுத்து புஸ்பராசா (வயது 80) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர் தனிமையில் வசித்து வந்த நிலையில், முதியவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து , அயலவர்கள் மானிப்பாய் காவற்துறையினருக்கு தகவல் வழங்கினர்.

அதனை அடுத்து குறித்த வீட்டுக்கு காவற்துறைனர் சென்றபோது, முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது, சடலத்தை மீட்ட காவற்துறைனர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

முதியவர் உயிரிழந்து நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் , காவற்துறைனர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More