Home இலங்கைஉள்ளூராட்சி தேர்தலில் யாழில் நேரடி வேட்பாளராக வெற்றி பெற்ற பெண்களுக்கு கௌரவம்!

உள்ளூராட்சி தேர்தலில் யாழில் நேரடி வேட்பாளராக வெற்றி பெற்ற பெண்களுக்கு கௌரவம்!

by admin

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, 15 பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், யாழ்.மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா, வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என  பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More