Home இலங்கைபலாலி மீன்பிடி துறைமுக பகுதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது!

பலாலி மீன்பிடி துறைமுக பகுதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது!

by admin

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகள் தற்போது துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து சென்ற நிலையில் துறைமுக பகுதிகள் மோசமாக சேதமடைந்துள்ளன. அத்துடன் , கடல் பகுதிகளில் கற்களும் காணப்படுகிறன.
இந்நிலையில் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கடல் தொழிலுக்கு செல்லும் போது. பல இடர்களை சந்தித்து வருகின்றனர்.
படகுகளை கடலுக்குள் கொண்டு செல்லும் போது கடலின் ஆழம் காணாமை , மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கற்கள் போன்றவற்றால் படகுகள் சேதமடைகின்றமை, போன்ற இடர்களை சந்தித்து வருகின்றனர்.
 அதேவேளை மீன் பிடி துறைமுக பகுதிகளையும் புனரமைத்து தருமாறு கடற்தொழிலாளர்கள் கோரி வந்த நிலையில் , தற்போது புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புனரமைப்பு பணிகள் முன்னெடுப்படும் நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , நேரில் சென்று பார்வையிட்டனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More