Home இலங்கையாழ்.பல்கலை சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள்!

யாழ்.பல்கலை சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள்!

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் பூர்த்தியாகுவதையோட்டி பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக
உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாசும் கௌரவ விருந்தினராக சட்டத்தரணி மாலா சபாரத்தினமும் சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி பி.என்.தம்புவும் கலந்துகொள்ளவுள்ளதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தொடர்பான ஆவணப்படமொன்று வெளியிடப்படவுள்ளது

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, இலங்கை சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்தலால் டி அல்வீஸ், சட்டத்தரணி எல்.இளங்கோவன், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, சட்டத்தரணி எர்மிசா டெகல், சட்டத்தரணி லக்ஸ்மனன் ஜெயகுமார் ஆகியோர் பங்கேற்கும் குழு விவாதம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நிஸாந்தவின் நெறியாள்கையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More