Home இலங்கைவலி. வடக்கில் காணி உறுதிகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

வலி. வடக்கில் காணி உறுதிகளுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்!

by admin

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2ஆயிரத்து 400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24.06.25)  நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

நான்காவது நாளான இன்றைய தினம் காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்கள் அப்பகுதியிலையே உணவு சமைத்து, அருந்தி அவ்விடத்தை விட்டு நகராமல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More