Home இலங்கைஅனுமதி பத்திரத்தில் மோசடி செய்து மன்னாரில் இருந்து மணல் ஏற்றி வந்த மூவர் கைது!

அனுமதி பத்திரத்தில் மோசடி செய்து மன்னாரில் இருந்து மணல் ஏற்றி வந்த மூவர் கைது!

by admin

மணல் ஏற்றி செல்வதற்கான அனுமதி பாத்திரங்களில் மோசடி செய்து மணலை ஏற்றி சென்ற குற்றச்சாட்டில் 03 டிப்பர் சாரதிகளை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் பகுதியில் இருந்து ஆற்று மணல் ஏற்றி வந்த மூன்று டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி காவற்துறையினர்  நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (24.06.25) தனங்கிளப்பு பகுதியில் வழிமறித்தது சோதனையிட்டனர்.
அதன் போது, தரை மணலை ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தினை பெற்று , அதில் ஆற்று மணலை ஏற்றுவதற்கான அனுமதி என மோசடியாக மாற்றம் செய்து மணலை ஏற்றி வந்தனை காவற்துறையினர்  கண்டறிந்துள்ளனர்.
அதனை அடுத்து மூன்று டிப்பர் வாகனத்தினையும் கைப்பற்றிய காவற்துறையினர்  , அதன் சாரதிகளையும் கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட சாரதிகளை காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More