Home இலங்கைசந்திரசேகரன் தலைமையிலான குழுவினரும் செம்மணியில் இருந்து வெளியேற்றம்!

சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரும் செம்மணியில் இருந்து வெளியேற்றம்!

by admin

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தலைமையிலான குழுவினரையும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்

செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (25.06.25)  மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி, யாழ் . மாநகர சபை உறுப்பினர் சு. கபிலன் ஆகியோரையும் அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றி இருந்தனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More