Home இலங்கைஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்யாழில் வோல்கர் டர்க்!

ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்யாழில் வோல்கர் டர்க்!

by admin
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை (25.06.25) யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.
உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை தரையிறங்கிய ஆணையாளர் , முன்னதாககோவில் வீதியில் அமைந்துள்ள  IOM அலுவகத்திற்கு சென்றிருந்தார்.
அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழி காணப்படும் சிந்துபாத்தி இந்து மயானத்திற்கு சென்று புதைகுழிகளை நேரில் பார்வையிட்டார்.
அதன் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் போது, களத்தில் நின்ற சட்டத்தரணிகள் , மனித புதைகுழி அப்பகுதியில் காணப்படுவதாக காவல்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் புதைகுழிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அதனை தொடர்ந்து செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ் . வளைவுக்கு அருகில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் ” அணையா விளக்கு” போராட்ட களத்திற்கு நேரில் சென்று , அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஏற்றப்பட்ட ” அணையா தீபத்திற்கு முன்பாக மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
 
 ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் செம்மணி புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார்.
அதன் போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் , புதைகுழி காணப்படும் இடத்திற்கு சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு முன்பாகவே ஊடகவியலாளர்களை பொலிஸார் தடுத்தி நிறுத்தி இருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More