Home இலங்கைஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் செப்பேடு கையளிக்கப்பட்டது!

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் செப்பேடு கையளிக்கப்பட்டது!

by admin

செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர்.

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி , யாழ். வளைவுக்கு அண்மையில் கடந்த திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அணையா விளக்கு ஏற்றப்பட்டு , போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மூன்று நாட்களாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு நேற்றைய தினம் புதன்கிழமை (25.06.25) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி போராட்ட களத்திற்கு சென்ற வேளை , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய் மார்களால் 06 அம்ச கோரிக்கைகள் அடங்கிய செப்பு தகடு கையளிக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More