Home இலங்கை35 ஆண்டுகளின் பின் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதி – உயர் பாதுகாப்பு வேலிகளும் பின் நகர்த்தல்!

35 ஆண்டுகளின் பின் ஆலயத்திற்கு சுதந்திரமாக செல்ல அனுமதி – உயர் பாதுகாப்பு வேலிகளும் பின் நகர்த்தல்!

by admin

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு (தற்போதும் ஆலயத்திற்கு மட்டும் செல்லவே அனுமதி) கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த வருடம் மார்ச் மாதம் 22ஆம் திகதி, வயாவிளான் கிழக்கு , வயாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி வடக்கு, பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 234.83 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்ட போதும் , உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தப்பபடாமல் , குறித்த விவசாய காணிகள் உயர் பாதுகாப்பு வலய எல்லைக்குள் காணப்பட்டமையால் , விவசாயிகள் சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது இராணுவத்தினரின் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள் மத்தியிலையே விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் குறித்த உயர்பாதுகாப்பு வலய வேலிகளை பின் நகர்த்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமையால் எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளில் விவசாயிகள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் ராசிக குமார மரியாதை நிமித்தமாக வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகனை நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்த போது, விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More