Home இலங்கைசுன்னாகத்தில் இளைஞன் உயிரிழப்பு!

சுன்னாகத்தில் இளைஞன் உயிரிழப்பு!

by admin

சுன்னாகத்தில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு துஜீவன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்;

குறித்த இளைஞனும் அவரது நண்பர்களும் நேற்றிரவு மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இளைஞனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதன்போது உடனிருந்த நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கு காரணம் தெரியவராத நிலையில் சுன்னாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

காரைநகரில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 காரைநகர் – களபூமியைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை பவன்ராஜ் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும் லான்ட்மாஸ்டரும் கடந்த 1ஆம் திகதி இரவு (01.07.25) காரைநகர் பாலத்தடியில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவற்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More