ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் ஆலோசகர் வைத்தியர் மகேஷி சூரசிங்க விஜேரத்னவின் 21 வயது மகள், கெசல்வத்த காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை மிரட்டியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
முன்னதாக, மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் வைத்தியர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன மற்றும் இருவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

