Home உலகம்லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்தானது!

லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்தானது!

by admin

லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறியரக விமானம் வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி உள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து  பிரித்தானியாவின் ஹட்விக் விமான நிலையத்தை நோக்கி, 242 பேருடன் க புறப்பட்ட  ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 – 8 ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம், 600 – 800 அடி உயரமே பறந்த   சில நிமிடங்களிலேயே கீழே வெடித்து சிதறியதில் , குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்திற்கு எரிபொருள்  சுவிட்ச் ஓப் செய்யப்பட்டதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் வெடித்து சிதறி விபத்தில் சிக்கி உள்ளது. ஈஸி ஜெட் நிறுவனத்தின்  12 மீட்டர் நீளம் கொண்ட  இந்த சிறிய விமானம் நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த  போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, பாரிஸ், அலிகாண்டே, பாரோ, பால்மா, மல்லோர்கா ஆகிய இடங்களுக்கான விமானங்களை ஈஸி ஜெட் ரத்து செய்துள்ளது. மேலும் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் அல்லது அவர்களின் நிலை குறித்து விபரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

.ஒவ்வொரு வாரமும் 20 வழித்தடங்களில் 122 விமானங்களை  ஈஸி ஜெட் இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More