-மன்னார் நகர சபையின் முதல்நாள் அமர்வு கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற போது தொடர்ந்தும் உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் சபை முதல்வரினால் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அமர்வின் தொடர்ச்சியாக இன்றைய தினம் வியாழக்கிழமை (17) காலை 9.30 மணிக்கு சபை முதல்வரினால் மீண்டும் சபை கூட்டப்பட்டது.
இதன் போது அனைத்து உறுப்பினர்களும் பங்குபற்றி இருந்தனர்.இதன் போது மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய நகர சபையின் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோருக்கிடையில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வாய்த் தர்க்கமாக மாறியது.குறித்த இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தனர்.




