Home இலங்கைசெம்பருத்தி கலை ஆக்கங்களின் “கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாடுவோம் ! – காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை”

செம்பருத்தி கலை ஆக்கங்களின் “கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாடுவோம் ! – காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை”

by admin
செம்பருத்தி கலை ஆக்கங்களின் “கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாடுவோம் ! – காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை.”
தொடக்க விழா 19.07. 2025 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
 கைத்தறிப் பண்பாட்டைக் கொண்டாட,  தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
……………………………….
கைத்தறி பண்பாட்டை கொண்டாடுவோம் – எங்கள்
கலையாக்கத் திறன்களைக் கொண்டாடுவோம்
 வண்ண வண்ண வடிவங்கள் ஆக்கிடுவோம் – எங்கள்
எண்ணம் போல் அழகாக அணிந்திடுவோம்
 முன்னோர் தந்த முதுசங்கள் போற்றிடுவோம் – நாங்கள்
பின்னோர் காலம் பெருமை கொள்ள ஆக்கம் செய்வோம்
 இன்றைக்கும் என்றைக்கும் எங்கள் கலைகள்
எவருமே வியந்திட எடுத்துச் செல்வோம்
 உடலுக்கும் உள்ளத்துக்கும் உவகை தரும் – எங்கள்
கைத்தறி பண்பாட்டை கொண்டாடுவோம்
கலையும் வாழ்வும் இணைந்து செல்லும் – எங்கள்
கைத்தறி பண்பாட்டை கொண்டாடுவோம்
 எங்கள் கலை எங்கள் கலை கைத்தறிக்கலை
எல்லோரையும் தேட வைக்கும் கைத்தறிக்கலை
எங்கள் கைத்தறிக்கலை
 எங்கள் கையில் விளைகின்ற அழகுக்கலை
எவருமே விரும்பிட விளைந்த கலை
 ஆடை செய்வோம்  அணிகள் செய்வோம் – அழகழாய்
நாங்கள் பயன்படு பொருள்களும் செய்து கொள்வோம்
 கைத்தறிக் கலையினை கையில் எடுப்போம் – அந்த
கலை தந்த வாழ்வினில் மேன்மை கொள்ளுவோம்.
 பேராசிரியர். சி.ஜெயசங்கர்
14.07.2025
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More