இயற்கையே நன்னிலம் இயற்கை தான் நன்னிலம்
நன்னிலம் நன்னிலம் உயிர்கள் வாழ் நல்லில்லம்
நிலத்தினில் நிறைந்த இனிய வாழ்வுதான் நன்னிலம்
மகிழ்ச்சிகொள்ளும் வாழ்வு விளையும் நிலமே நிலமே நன்னிலம்
நீரோடும் இடமெல்லாம் நீரேந்தி பருகிடும் நிலந்தானே நன்னிலம்
நிலந்தானே நன்னிலம்
இயற்கையின் வளத்தினில் இயல்பாக விளைந்திடும்
நிலந்தானே நன்னிலம் நிலந்தானே நன்னிலம்
மனிதர்கள் முயற்சியில் மாற்றங்கள் வந்தன
காடுகள் பற்றைகள் கண்டுதாம் வந்தவர்
தோட்டங்கள் போட்டனர்
பகுத்துண்டு வாழ்ந்துமே பல்லுயிர் ஓம்பினர்
நஞ்செது நல்லதெது அறியா முன்னோர்கள் –
இறப்பினில்
நல்லதை அறிந்துமே வாழ்ந்தவர்
இயற்கையில் இயற்கையாய் ஆக்கங்கள் செய்தனர்
பலகாலம் வாழ்கின்ற உலகங்கள் தந்தனர்
இயற்கையில் இயற்கையாய் ஆக்கங்கள் செய்யும்
அறிவோடு திறன்களும் கொண்டவர் வாழ்விலே
நலமாக நிலமெல்லாம் உயிரெலாம் வாழ்ந்தன
அறிவினில் நஞ்சினை ஆயுதமாக்கியே
ஆளுகை செய்திட வந்தவர் செயல்களில்
நிலமெல்லாம் நஞ்சு நிறைந்தோடி உறைந்ததே
நஞ்சினை நிறைத்துமே நிலமெல்லாம் கொன்றவர்
தேவராய் உலகெல்லாம் தெரிய வந்தாரே
நஞ்சினில் விளையும் இலாபத்தில் கொளுத்தவர்
நஞ்சே உலகெனும் நிலைமையை படைத்தனர்
நஞ்சினால் நாசம் இயற்கையில் இயற்கையாம் – மீள
முடியாத முன்னேற்றம் இதுவென்றும் இயற்றினர்
உலகெலாம் நஞ்சே இயல்பென்று புனைந்தவர்
நாசத்தின் எழுச்சியில் நன்றாய்தான் கொளுத்தனர்
நஞ்சுப்பிடியிலே நீசர்கள் கைகளில் சிக்கிய உலகெலாம் -நலமாய்
மனிதர் கைகளால் மாறுமே மாறுமே
இயற்கையில் இயற்கையாய் வாழும் கலைவாழ்வு
பொங்கிப் பெருகி உலகெலாம் பரவுதல்
மனிதர்கள் செயலே மனிதர்கள் செயலே
மனிதர்கள் எழுவோம் மனிதர்கள் எழுவோம்
தாரகைகள் கோடி தாரகைகள் கோடி
வானத்தில் மிளிர்க வானத்தில் மிளிர்க
மனிதர்கள் கோடி மனிதர்கள் கோடி புவி மீது எழுக புவி மீது எழுக
நச்சுப் பிடியிலே நீசர்கள் கைகளில் சிக்கிய உலகெலாம் -நலமாய்
மனிதர்கள் கைகளால் மாறுமே மாறுமே
இயற்கையே நன்னிலம் இயற்கை தான் நன்னிலம்
நன்னிலம் நன்னிலம் உயிர்கள் வாழ் நல்லில்லம்.
சி.ஜெயசங்கர்



