Home இலங்கையாழில். வன்முறை – காவல்துறையினா் துப்பாக்கி பிரயோகம் -மோட்டார் சைக்கிள் தீக்கிரை

யாழில். வன்முறை – காவல்துறையினா் துப்பாக்கி பிரயோகம் -மோட்டார் சைக்கிள் தீக்கிரை

by admin

 

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . காவல்துறையினா் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர்.  குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதுடன் , மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு , சேதமாக்கப்பட்டுள்ளது  சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மூளாய் ப் பகுதியில் இரு தனி நபர்களுக்கு இடையில் நேற்றைய தினம் தினம் ஏற்பட்ட தர்க்கம் , வட்டுக்கோட்டை காவல்  நிலையம் வரையில் சென்று , தீர்த்து வைக்கப்பட்டது.   அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரு நபர்களின் பிரச்சனை மீண்டும் தலை தூக்கிய நிலையில் , அது அப்பகுதியை சேர்ந்தவர்களின் பிரச்சனையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.  அதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன் , மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டை காவல்துறையினா்  சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை காவல்துறையினா்  மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.  அதனை அடுத்து காவல்துறையினா் வானத்தை நோக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அப்பகுதியில் குழுமி இருந்தவர்களை துரத்தினர்.
அத்துடன் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை காவல்துறையினா்  கைது செய்துள்ளனர். ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் காவல்துறையினா் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More