பின்னர் இரு தினங்கள் அங்கு இருந்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரை நோக்கி நேற்று புதன்கிழமை (30.07.25) வந்துள்ளார்.
அப்போது வேம்பார் கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான வாகனம் நின்று கொண்டதை பார்த்த காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியுள்ளார்.
தொடர்ந்து, மாவட்ட போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவற்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் வாகனத்தை சோதனையிட்ட போது வாகனத்தில் தக்காளி கூடை களுக்கு பின்புறம் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரியவந்தது.
மேலும், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 240 கிலோ கஞ்சாவை காவற்துறையினர் பறிமுதல் செய்தனர்.

