மியன்மாரில் 4 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இராணுவ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தலில் மோசடி நடைபெற்றதால் தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது எனத் தொிவித்த அவா் நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும் எனத் தொிவித்துள்ளாா். .
அத்துடன் அடுத்த 6 மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது எனவும் அதற்காக 4 ஆண்டுகளாக உள்ள இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர தீா்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

