Home இலங்கைநெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது!

நெடுந்தீவில் 4 இந்திய மீனவர்கள் கைது!

by admin

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (05.08.25)  இரவு கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள் , படகொன்றில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களையும் , கைது செய்த கடற்படையினர் , அவர்களின் படகினையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை , காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற கடற்படையினர் , அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More