Home இலங்கைபுங்குடுதீவில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு – இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயம்

புங்குடுதீவில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு – இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயம்

by admin

யாழ்ப்ப்பாணத்தில்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.  புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ,  அந்நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு , தாக்குதலாளி தப்பி சென்றுள்ளார்
தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நால்வரும் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More