Home இலங்கைகளவாடப்பட்ட நகைகளுடன் இளைஞன் கைது

களவாடப்பட்ட நகைகளுடன் இளைஞன் கைது

by admin
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் களவாடப்பட்ட நகைகளுடன் ஊர்காவற்துறை பகுதியில் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை காவல்துறையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற இளைஞனை வழிமறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்போது இளைஞன் முன்னுக்கு பின் முராண தகவல்களை தெரிவித்தமையால், இளைஞனை சோதனையிட்ட போது அவரது உடமையில் இருந்து  தாலிக்கொடி , சங்கிலி உள்ளிட்ட ஒரு தொகுதி நகைகளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்து ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை, இளைஞனின் உடமையில் இருந்து மீட்கப்பட்ட நகை, சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் களவாடப்பட்ட நகைகளே அவை என தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த இளைஞனின் வீட்டில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மேலும் சில நகைகளும், அதிநவீன கையடக்க தொலைபேசிகள் என்பவற்றையும்  மீட்டுள்ள காவல்துறையினர்  இளைஞனை  காவல்   நிலையத்தில் தடுத்து வைத்து   விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More