Home இலங்கை நல்லூரில் விசேட திருவிழாக்கள் ஆரம்பம் – இன்று சந்தானகோபாலர் உற்சவம்!

 நல்லூரில் விசேட திருவிழாக்கள் ஆரம்பம் – இன்று சந்தானகோபாலர் உற்சவம்!

by admin

 

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சந்தான கோபாலர் உற்சவம் நடைபெற்றது.

காலை 6.45 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சந்தான கோபாலர் உள் வீதியுலா வந்து , தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்தார்.

அதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கைலாச வாகன திருவிழா இடம்பெறவுள்ளது.

நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாளை திங்கட்கிழமை காலை கஜவள்ளி மகாவள்ளி உற்சவமும் , மாலை தங்கரத உற்சவமும் ,  நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை மாம்பழ திருவிழாவும், அன்றைய தினம் மாலை ஒரு முக திருவிழாவும் , மறுநாள் புதன்கிழமை மாலை சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.

இவ்வாரம் விசேட திருவிழாக்கள் நடைபெறவுள்ளமையால் , நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான மக்கள் நல்லூர் திருவிழாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் நல்லூர் ஆலய சூழலில் , 600 க்கும் மேற்பட்ட காவற்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை நல்லூர் ஆலயத்திற்கு அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் காவற்துறையினர்  தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More