Home இலங்கைமண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்!

மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்!

by admin

யாழ்ப்பாணம்   ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து , அராலி சந்தி , மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று , இரவு மண்டைதீவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.
மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டு , மூடப்பட்ட கிணற்றின் மேல் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து , படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் உருவ படங்கள் அவ்விடத்தில் வைக்கப்பட்டு , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More