Home இலங்கைமயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப்பணிகள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு

மயிலிட்டித்துறைமுக அபிவிருத்திப்பணிகள் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைப்பு

by admin
மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.  மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர்களான சுனில் வட்டஹல, உபாலி சமரசிங்க, வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More