அதற்கு அமைவாக, கடந்த 10ஆம் திகதி நல்லூர் மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் செயற்றிட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இந்த வாரம் இன்றைய தினம் புதன்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை நல்லூர் மற்றும் வலி.கிழக்கு பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் மேற்படி செயற்பாடு முன்னெடுக்கபடுவதுடன், வலி.தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
தொடர்ந்து மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் கால அட்டவணைபடி இச்செயற்பாடு இடம்பெறும்.
பொதுமக்கள் தமது வீடுகளில் உள்ள பெண் நாய்களை கொண்டுவந்து குறித்த தினங்களில் இலவசமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளமுடியும்.
அதேவேளை நாய்களை பிடித்துவழங்க விரும்புபவர்கள் நாய்பிடிப்பாளர்களாக பிரதேசசபைகளில் பதிந்து, தமக்கான முற்தடுப்பு ஊசிகளை பெற்று, நாய்களை பிடித்து வழங்கமுடியும்.
பிடித்து வழங்கும் நாய் ஒன்றறுக்கு 600 ரூபாவை பெற்றுகொள்ளமுடியும், என மேலும் தெரிவித்தார்.

