Home இலங்கைஇடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை

இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை

by admin

 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டதனால் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டு   மந்திரி மனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலையே இன்றைய தினம் புதன்கிழமை மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More