தங்காலை பகுதியில் சுமார் 200 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பார ஊர்தி ஒன்றிலிருந்து இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத் தெரிவித்துள்ளார்.
பார ஊர்தியில் இருந்த போதைப்பொருட்களின் சரியான அளவு இன்னும் கணக்கிடப்படவில்லை என்பதுடன், அந்த போதைப்பொருளின் அளவு 200 கிலோ கிராமை விட தாண்டக்கூடும் என்றும் சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கார ஊர்தியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

தங்காலை சீனிமோதர பகுதியில் 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு!
தங்காலை சீனிமோதர பகுதியில் 200 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (22) காலை அந்தப் பகுதியில் புனரமைக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த வீட்டுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பார ஊர்தியிலேயே இந்த போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
நடத்தப்பட்ட விசாரணையின் போது, அந்த வீட்டிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய பார ஊர்தியில் இருந்து ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகள் முன்னதாக மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் அந்த லொறியில் இருந்து 4 நவீன துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

