Home இலங்கைதங்கத்தை உடலில் மறைத்து கடத்திய பெண் யாழ் . விமான நிலையத்தில் கைது

தங்கத்தை உடலில் மறைத்து கடத்திய பெண் யாழ் . விமான நிலையத்தில் கைது

by admin

 

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் , சென்னையில் இருந்து , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பி இருந்தார்.  பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய உத்தியோகஸ்தர்கள் பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , குறித்த பெண் சத்திர சிகிச்சை மூலம் உடலில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தமையை கண்டறிந்துள்ளனர்.
அதனை அடுத்து அப்பெண்ணை கைது செய்த உத்தியோகஸ்தர்கள் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்து , சிகிச்சை அளித்து தங்கத்தை மீட்டுள்ளனர்.  குறித்த பெண்ணிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More