Home இலங்கைதிலீபனின் ஊர்தி முன், பட்டாசு கொளுத்திய இளைஞன் கைது!

திலீபனின் ஊர்தி முன், பட்டாசு கொளுத்திய இளைஞன் கைது!

by admin
பருத்தித்துறையை வந்தடைந்த தியாக தீபத்தின் ஊர்தி – பட்டாசு கொளுத்திய இளைஞனை கைது செய்த பொலிஸார்
To:

 

பருத்தித்துறை நகரை சென்றடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞனை கைது செய்யுமாறு தவிசாளர் காவற்துறையினரை  கோரியதை அடுத்து இளைஞன் பருத்தித்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், “திலீபன் வழியில்
வருகிறோம்” என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பகுதிக்கு சென்றிருந்தது.

இதன் போது பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்லஸ் போல் மற்றும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் தியாக தீபம் திலீபன் அவர்களின் திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்

இதன் போது பருத்தித்துறை நகரபகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரால் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொளுத்தி அஞ்சலி செலுத்த வந்தோருக்கு இடையூறாக செயற்பட்டார் என பருத்தித்துறை நகர சபை தவிசாளர் பருத்தித்துறை காவற்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து , காவற்துறைaினர் இளைஞனை கைது செய்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More