Home இலங்கைவோல்கர் டர்குடன் அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

வோல்கர் டர்குடன் அநுரகுமார திசாநாயக்க சந்திப்பு!

by admin

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவை அறையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின்போது, ​​மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More