Home இலங்கைகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்

by admin

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாம் நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த போராட்டம் யாழ் செம்மணி பகுதியில் நேற்றைய தினம் ஆரம்பமான நிலையில் ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More