Home இலங்கைசுற்றுலா விசாவில் இலங்கை வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து பருத்தித்துறையில் ஜோதிட நிலையம் நடாத்திய மூன்று இந்தியர்கள் கைது!

by admin
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து ஜோதிட நிலையம் நடாத்தி வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பருத்தித்துறை காவற்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பகுதியில் , இந்தியாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று வாடகை வீட்டில் குடியமர்ந்த ஜோதிட நிலையம் நடாத்தி வருவதாக காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டிற்கு நேற்று சென்ற காவற்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் மூவரும் கணவன் – மனைவி மற்றும் பிள்ளை எனவும் அவர்கள் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
மூவரும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து , பருத்தித்துறை பகுதிக்கு சென்று விடுதி ஒன்றில் தங்கி ஜோதிடம் கூறி வந்த நிலையில் , அண்மையில் தும்பளை பகுதியில் வீடொன்றினை வாடகைக்கு பெற்று , அங்கு குடியமர்ந்து வீட்டினை ஜோதிட நிலையமாக மாற்றி ஜோதிடம் கூறி வந்துள்ளமை விசாரணைகளில் மேலும் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் பருத்தித்துறை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More