Home இலங்கைமகிந்தவின் குண்டு துளைக்காக வாகனம் கையளிப்பு

மகிந்தவின் குண்டு துளைக்காக வாகனம் கையளிப்பு

by admin

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காக வாகனம் நேற்று (03) திருப்பி கையளிக்கப்பட்டுள்ளதாக  அவரது  ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே, வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகளின் உரிமைகள் (நீக்குதல்) சட்டம் நடைமுறைக்கு வந்த பின், கடந்த செப்டம்பர் 24ம் திகதி  அன்று ஜனாதிபதியின் செயலாளர், மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களையும் திருப்பி கையளிக்குமாறு அறிவித்ததாகவும்  மனோஜ் கமகே  குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன், மகிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ள  மனோஜ் கமகே இந்த சூழ்நிலை காரணமாக, மகிந்த ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும்   எச்சரித்துள்ளார்.

மேலும் அடுத்த வாரம், காவல்துறைமா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரதானிகளை சந்தித்து, மகிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்கு தேவையான வாகனங்களை பெறுவதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More