Home இலங்கைஇராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட கனரக வாகனம் மோதி முதியவர்கள் படுகாயம்

இராணுவ வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட கனரக வாகனம் மோதி முதியவர்கள் படுகாயம்

by admin

 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு முதியவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னே சென்ற இராணுவத்தினருக்கு சொந்தமான வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட கனரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு முதியவர்கள் மீது  மோதியதில் விபத்து சம்பவித்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
விபத்து படுகாயமடைந்த முதியவர்கள் இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டியில் , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  விபத்து தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More