Home இலங்கை30 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல்

30 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு விளக்கமறியல்

by admin

 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து  மீன்பிடியில் ஈடுபட்ட 30 ராமேஸ்வரம்  மீனவர்களை  எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (9) மாலை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதிகளை சேர்ந்த 30 மீனவர்கள் நெடுந்தீவுக் கடற்பரப்பில் 4 படகில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த  போது   கடற்படையினரால் நேற்று இரவு    கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 30  மீனவர்கள் கடற்படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இன்று வியாழக்கிழமை (9) காலை  மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு  , திணைக்கள அதிகாரிகள் பதிவு நடவடிக்கைகளுக்கு பின்னர் இன்று (9)  மாலை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மீனவர்கள் மீது  எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  மன்னார் நீதிமன்றில்   முற் படுத்தப்பட்டனர் .

குறித்த வழக்கை விசாரித்த மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 23ம் திகதி வரை மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More