Home உலகம்இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

by admin

 

இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எகிப்தில் நடைபெற்ற அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தலைமையில் உலக தலைவர்கள் ஆதரவுடன் இஸ்ரேல் காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – காசா போர் முடிவுக்கு வந்துள்ளது

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல் – காசா இடையே     கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த போரால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர்.

இந்தநிலையில்  அமெரிக்க  ஜனாதிபதி  டிரம்ப், இஸ்ரேல் – ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடும் வகையில் எகிப்தில் மாநாடுக்கு ஏற்பாடு செய்தார். இதன்படி இன்று எகிப்து  ஜனாதிபதி அப்தல் பத்தா அல்-சிசி ஆகியோரின் தலைமையில் நடந்த மாநாட்டில் இந்த அமைதி ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இன்று இந்த அமைதி ஒப்பந்தமானது கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலமாக கடந்த இரண்டு ஆண்டுகாலமாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More