Home இலங்கைமீனவர்களின் வலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிவப்பு நண்டு

மீனவர்களின் வலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிவப்பு நண்டு

by admin

 

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கிராம மீனவர்கள் தமது கடற்பரப்பில்  காணப்படும்   சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின்  தாக்கம் காரணமாக  குறித்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மன்னார் தீவுப்பகுதி கடற்றொழில் சார்   கிராமங்களை கொண்ட பகுதியாகும்.இவற்றில் தாழ்வுபாடு கிராமமும் ஒன்றாகும். குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக’ சிவப்பு நண்டு’  என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால்  மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில்  பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளது.  குறித்த நண்டை  எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பகுதி மீனவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு  முன் குறித்த சிவப்பு நண்டினால் ஒரு தடவை இப்பகுதியில் பாரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் அதன் பிற்பாடு இந்த ஆண்டு   இவ்வாறு வருகை தருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு,தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More