Home இலங்கை1240 கடலட்டைகளுடன் இருவர் கைது

1240 கடலட்டைகளுடன் இருவர் கைது

by admin

 

யாழ்ப்பாணத்தில் செல்லுபடியற்ற அனுமதி பத்திரத்துடன் , கடலட்டைகளை எடுத்து சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயிரத்து 240 கடலட்டைகளையும் , கடலட்டைகளை எடுத்து சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினர் , காவல்துறை விசேட அதிரடி படையினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வேலணை, துறையூர் பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது, செல்லுபடியற்ற அனுமதி பத்திரத்துடன் , சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 1240 கடலட்டைகளை  வாகனத்தில் எடுத்து செல்லப்படுவதனை கண்டறிந்து வாகனத்தில் பயணித்த அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் , மீட்கப்பட்ட கடலட்டைகளையும் , அவற்றை எடுத்து சென்ற வாகனத்தையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More