Home இலங்கைதனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

by admin

 

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான  சி.வீ.கே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி உரிமையாளருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று , உயர் பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று , வைத்தியசாலையின் கட்டட வேலைகளை நேரில் பார்வையிட்டனர்.

அதன் பின்னர்  காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய எம்.ஏ. சுமந்திரன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வைத்தியசாலை கட்டட வேலைக்கு எதிராக மிக விரைவில் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக  உறுதியளித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More