281
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை காவல் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
பொம்மை வெளி பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பில் காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த நபரை கைது செய்த காவற்துறையினர் அவரது உடைமையில் இருந்து 5 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டிருந்தனர்.
அதனை அடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக காவற்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மன்று அனுமதிக்க வேண்டும் என காவற்துறையினர் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
காவற்துறையினரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்று , சந்தேகநபரை காவற்துறையின் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதித்தது.
யாழில்.ஹெரோயினுடன் மூவர் கைது!
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாண நகர் பகுதி , கொக்குவில் மற்றும் பொற்பதி பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love

