Home இலங்கை3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது Inbox

3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது Inbox

by admin

யாழ்ப்பாணத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பருத்தித்துறை  காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடற்கரையில் படகொன்றில் இருந்து கஞ்சா இறக்கப்பட்டுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் , கஞ்சா போதைப்பொருளை படகில் இருந்து கரையில் இறக்கிக்கொண்டிருந்த மூவரை மடக்கி பிடித்தனர்.

மடக்கி பிடித்த மூவரையும் கைது செய்த காவல்துறையினர் , 47 பொதிகளில் காணப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவையும் ,  அவற்றை கொண்டு வந்த படகையும்   கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் பருத்தித்துறை காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதுடன் , மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More