நேற்று சனிக்கிழமை மாலை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷையா் – ஹண்டிங்டன் செல்லும் புகையிரதத்தில் பலா் கத்திக்குத்துக்குள்ளானதையடுத்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டொன்காஸ்டரிலிருந்து லண்டன் கிங்ஸ் குரோசுக்குச் செல்லும் புகையிரதத்தில் இரவு 7.36 மணியளவில் இந்தக் கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயங்களுக்குள்ளான பத்து பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் காணப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆயுதமேந்திய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஹண்டிங்டனில் புகையிரதம் நிறுத்தப்பட்டு அங்கு இரண்டு பேரைக் கைது செய்துள்ளதாகவும் இது தொடா்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினா் மேற்கொண்டு வருவதாகவும் தொிவிக்கப்படுகின்றது


