Home இலங்கைமூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் சுமார் 20 வருடங்களின் பின்னர் ஒரே பிரசவத்தில் , மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயார் , ஒரு மாத காலம் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.

 திருமணமாகி கடந்த 20 வருடங்களாக குழந்தைகள் இல்லாத  குறித்த பெண் இந்த வருடம் கர்ப்பம் தரித்த நிலையில் ,  கடந்த மாதம் 07ஆம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்தார்.
அதனை அடுத்து அவரது உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
பிறந்த மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More