Home இலங்கைஇலங்கையிலிருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க அமெரிக்கா 4 மாத அவகாசம்

இலங்கையிலிருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க அமெரிக்கா 4 மாத அவகாசம்

by admin
இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்காக உரிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் அமெரிக்காவினால் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் கடல் பாலூட்டிகளை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் பாலூட்டி இனங்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளிடமிருந்து பாலூட்டிகளை பாதுகாக்கும் சான்றிதழ்களை பெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் இலங்கை குறித்த சான்றிதழை வழங்குவதற்கு தாமதித்ததன் காரணமாக இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதியை எதிர்வரும் தை மாதம் முதலாம் திகதி முதல் நிறுத்துவதற்கு அமெரிக்கா முன்னர்  தீர்மானித்திருந்தது.

அந்நிலையில், இலங்கை நண்டு ஏற்றுமதி தொடர்பில் அமெரிக்க மற்றும் இலங்கை இராஜதந்திர உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதை அடுத்து , சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையால் , எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் வழமை போன்று நண்டு ஏற்றுமதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு மாத கால பகுதிக்குள் தேவையான ஆவணங்களை வழங்க முடியும் என்பதனால் , தொடர்ந்தும் நண்டு ஏற்றுமதி தடையின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More