Home இலங்கைதூக்கத்தில் இருந்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் உயிரிழப்பு!

தூக்கத்தில் இருந்த யுவதி மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் உயிரிழப்பு!

by admin
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்டு யுவதியொருவர்  உயிரிழந்துள்ளார்.
இருபாலை பகுதியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு தூங்க சென்ற யுவதி , நேற்றைய தினம் அதிகாலை வேளை , தூக்கத்தில் இருந்து எழுந்து , மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். அதனை அடுத்து , நோயாளர் காவு வண்டிக்கு வீட்டார் அறிவித்த வேளை , நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் யுவதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதனை அடுத்து பிறிதொரு வாகனத்தில் யுவதியின் சடலத்தை, யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில்  ,உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More