Home இலங்கைஇந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை – 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

இந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை – 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

படகு உரிமையாளர்களுக்கு 80 இலட்சம் அபராதம் Inbox

by admin
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , மூவருக்கு 06 மாத கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் , ஏனைய 26 பேருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 06 வருட காலங்களுக்கு மன்று ஒத்திவைத்துள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நெடுந்தீவினை அண்டிய கடற்பரப்பினுள் , அது மீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு படகுகளுடன் 29 பேர் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , 29 பேரையும்  குற்றவாளிகளாக மன்று கண்டது.  அதனை அடுத்து , படகோட்டிகள் இருவருக்கும் , படகின் உரிமையாளர் ஒருவருக்குமாக மூவருக்கு 06 மாத கால கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதில் படகின் உரிமையாளர் ஒருவர் காணப்பட்டமையால் , அந்த படகினை அரசுடைமையாக்க உத்தரவிட்ட மன்று , அத்துடன் இரு படகின் உரிமையாளர்களுக்கும் தலா 40 இலட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. மற்றைய படகின் உரிமையாளர் இல்லாதமையால் , அப்படகின் மீதான வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.
அதேவேளை இரு படகில் இருந்த ஏனைய 26 பேருக்கும் எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத காலமும் மற்றைய குற்றச்சாட்டுக்கு ஒரு வருட கால பகுதியுமாக 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 06 வருட காலங்களுக்கு மன்று ஒத்தி வைத்துள்ளது.
அதன் அடிப்படையில் , குறித்த 26 பேரும் எதிர் வரும் 06 வருட கால பகுதிக்குள் மீண்டும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால் , இரண்டு வருட சிறைத்தண்டனையுடன் , பிடிபடும் கால பகுதியில் விதிக்கப்படும் சிறைத்தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More