263
சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருளை உடைமையில் வைத்தி
சாவகச்சேரிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்றைய தினம் புதன்கிழமை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவரது உடைமையில் இருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியில் உள்ள இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக அறிந்து கொண்ட காவல்துறையினர் அவ்இளைஞனை கைது செய்ய சென்ற போது வாளை காட்டி காவல்துறையினரை அச்சுறுத்தியுள்ளார்.
காவல்துறையினர் வாளுடன் இளைஞனை மடக்கி , பிடித்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , இளைஞனின் உடைமையில் இருந்தும் போதைப்பொருளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் , காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love

