Home இலங்கையாழ். நகரில் இன்று நீரிழிவு நடைபவனி!

யாழ். நகரில் இன்று நீரிழிவு நடைபவனி!

by admin
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நீரிழிவுக் கழகத்தின் ஏற்பாட்டில் நீரிழிவு விழிப்புணர்வு நடைபவனி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக காலை 6.30 மணியளவில் இந்த நடைபயணம் ஆரம்பமானது.

குறித்த நடை பயணத்தில் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , மாவட்ட செயலர் ம. பிரதீபன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

இந்த நடைபவனி கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More