Home இலங்கைபாலியல் கல்வி செயற்பாட்டின் போது வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் – குற்றவாளிக்கு 40 வருட சிறை

பாலியல் கல்வி செயற்பாட்டின் போது வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் – குற்றவாளிக்கு 40 வருட சிறை

by admin

 

தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.   மட்டக்களப்பை சேர்ந்த 12 வயதான சிறுமியை , மாமனார் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் , சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் பாலியல் கல்வி தொடர்பிலான கற்பித்தலின் போது , சிறுமி சோகமாக இருந்ததனை அவதானித்து , அது தொடர்பில் ஆசிரியர் வினாவிய போதே சிறுமி தனக்கு நடந்த சம்பவம் தொடர்பில் கூறியுள்ளார்.
அது தொடர்பில் ஆசிரியரால்  காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த   காவல்துறையினர் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில்  , மாமனாரை கைது செய்தனர்.
குறித்த வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜெ. பிரபாகரன் முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, எதிரியான சிறுமியின் மாமனாரை குற்றவாளியாக கண்டு , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டினை செலுத்த தவறின் மேலும் மூன்று வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் , அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என தண்டனை தீர்ப்பை வழங்கினார்.
குறித்த வழக்கினை  அரச சட்டத்தரணி M.A.M லாபீருடன் அரச சட்டத்தரணி அனுசங்கன் ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்தினார்கள்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More